Wednesday, September 19, 2012

கூடங்குளம் அணு உலையைத் திற! - அணு சக்திக் குறித்த மார்க்சிய நிலைபாடு



அணுசக்தி காலாவதியாகிவிட்டது”, “அணு உலையை மூடுஎன்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்!

இந்திய அமெரிக்க இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களை ரத்துசெய்யப் போராடுவோம்!

கூடங்குளத்தில் ரசியாவின் உதவியோடு நிறுவப்படும் அணுமின் நிலையத்தைத் தொடங்கக்கூடாது என 80ஆம் ஆண்டுகளின் மத்தியிலேயே சில அமைப்புகள் போராட்டம் நடத்தின. கிறித்துவத் திருச்சபைகள், அரசுசாரா தொண்டுநிறுவனங்கள், புதிய இடதுசிந்தனையாளர்கள், மா.லெ. இயக்கத்தைச் சார்ந்த ஒரு சிலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது ஆபத் தானது, அணுசக்தி என்றாலே அணுகுண்டுதான், அணு உலைக ளால் மனித குலத்திற்கு ஆபத்து, மனிதகுலத்தை மீட்க உடனே அணுசக்தியை ஒழித்திட வேண்டும் என்றும்; இதுவே விஞ்ஞானப் பூர்வமாகச் சிந்திக்கும் யாவரும் எடுக்க வேண்டிய முடிவாகும் என்றும், இதற்கு மாறாக எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் மூடத்தனமானது என்றும், மனித நேயத்திற்கு எதிரானது என்றும் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.