Saturday, October 15, 2011

தேசிய இனப் பிரச்சினைக் குறித்து பாட்டாளிவர்க்க நிலைபாடு: பகுதி 1

தேசிய இன சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையும் முதலாளித்துவ தேசிய வாதமும்


திருச்சி மாவட்ட முற்போக்கு இளைஞர் அணி என்ற பெயரால் "இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு சரியான தீர்வு தமிழீழ நாடு பெறுவது! தமிழீழ நாடு பெறுவது ஆயுதப் போராட்டத்தின் மூலமே!" என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசிய இனப் பிரச்சனைப் பற்றிய பல தவறான கருத்துக்கள் வைக்கப்படுள்ளன. குறிப்பாக ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப்பிரச்சனை புரட்சிக்கு புதிய எல்லைகளை வகுத்து தருவதாகவும், எனவே ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனி அரசாக பிரிவதும், தொழிலாளர் வர்க்க கட்சி, இன அடிப்படையில் தனித்தனியாக கட்டப்படுவதும், இச்சகாப்பத்தத்தில் செய்யப்பட வேண்டியவை என்றும் அது கூறுகிறது. இக்கருத்துக்கள் மார்க்சிய - லெனினியத்திற்கும் முற்றிலும் புறம்பானவை. பாட்டாளி வர்க்க நலனுக்கு விரோதமானவை இது எவ்வாறு என்று பரிசீலிக்கும் முன்பாக தேசிய இனப் பிரச்சனை பற்றியும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப் பிரச்சனை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது பற்றியும் பொதுவான மார்க்சிய - லெனினிய கண்ணோட்டம் என்ன என்பதைப் பார்ப்போம். முதலில் தேசம், தேசிய இனப் பிரச்சனை என்றால் என்ன. சுயநிர்ணய உரிமை கோரிக்கை ஏன் எழுகிறது, அதன் பொருளென்ன என்பவற்றைப் பார்ப்பது அவசியம் அடுத்து தேசிய இனப்பிரச்சனையில் லெனினிய அணுகுமுறை என்ன என்பதையும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் இப்பிரச்சனை என்ன வடிவம் எடுக்கிறது, அது எவ்வாறு தீர்க்கப்படுகிறது,இப்பிரச்சனையில் பாட்டாளி வர்க்கம் என்ன நிலை மேற்கொள்ளவேண்டும், பாட்டாளி வர்க்க கட்சி எவ்வாறு கட்டப்பட்ட வேண்டும் என்பனவற்றையும் மார்க்சிய - லெனினிய மாவோ சிந்தனை வெளிச்சத்தில் பார்ப்போம். இறுதியாக திருச்சி முற்போக்கு இளைஞர் அணி பெயரால் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் காணப்படும் தவறான கருத்துக்களை விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

தேசம், தேசிய இனப்பிரச்சனை என்றால் என்ன? தேசம், தேசிய இனம் என்றால் என்ன?