Thursday, December 1, 2011

மொழி குறித்த மார்க்சிய லெனினியம - பாகம் 3

« தமிழ்மாய்க்கும் உலகமயமாக்கலை எதிர்ப்போம்!

« கருணாநிதி அரசின் பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அனுமதி கேட்டது.

மேற்கண்ட பொதுக்கூட்டம் நடந்தால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்றும், தற்போது உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும்என்று கூறி கூட்டம் நடத்த மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்துக்கு அனுமதிதர கோவை மாநகர காவல்துறை மறுத்து விட்டது. இவ்வாறு கருணாநிதி ஆட்சி கருத்துரிமையை மறுப்பது தனி ஒரு நிகழ்வல்ல.

மொழி குறித்த மார்க்சிய லெனினியம - பாகம் 2

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசின் பாசிசத் தாக்குதல்!

“பழந்தமிழ் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு என்ற தலைப்பிட்ட பிரசுரத்தை மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் மக்களிடம் வினியோகம் செய்தது. கோவை செம்மொழி மாநாட்டை எதிர்த்த இந்தப் பிரச்சாரத்தை முடக்குவதற்காக

- ம.ஜ.இ.க வின் அமைப்பாளர் உள்ளிட்ட முன்னணியினர் கைது;

மொழி குறித்த மார்க்சிய லெனினியம் - பாகம் 1

பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு!

நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதுவரை நடத்தப்பெற்று வந்த எட்டு உலகத் தமிழ் மாநாடுகளிலிருந்து வேறுபட்டது. உலகத் தமிழ்பேசும் மக்கள் தற்போது எதிர்கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினைக்குள் இறங்காமல் தப்பிக்கும் பொருட்டு கலைஞர் கருணாநிதி இம்மாநாட்டை உலகச் செம்மொழி மாநாடாக நடத்த விரும்புகிறார்.

Friday, November 11, 2011

மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல்தந்திரங்களும்

மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல்தந்திரங்களும்

- “காங்கிரசும் பாரதிய ஜனதாவும் இந்திய பாசிசத்தின் இருமுகங்கள்”,

-ம.ஜ.இ.க வெளியீடு, மார்ச் 1993

பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கம் மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையைத் தனது வழிகாட்டும் சிந்தாந்தமாக கொள்கிறது. மார்க்சியத்தின் உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதமாகும். முற்றிலும் நாத்திகவாதமும், எல்லா மதங்களுக்கும் நேர்படித்தான முறையில் பகைமையானதுமாகும்.

Saturday, October 15, 2011

தேசிய இனப் பிரச்சினைக் குறித்து பாட்டாளிவர்க்க நிலைபாடு: பகுதி 1

தேசிய இன சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையும் முதலாளித்துவ தேசிய வாதமும்


திருச்சி மாவட்ட முற்போக்கு இளைஞர் அணி என்ற பெயரால் "இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு சரியான தீர்வு தமிழீழ நாடு பெறுவது! தமிழீழ நாடு பெறுவது ஆயுதப் போராட்டத்தின் மூலமே!" என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசிய இனப் பிரச்சனைப் பற்றிய பல தவறான கருத்துக்கள் வைக்கப்படுள்ளன. குறிப்பாக ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப்பிரச்சனை புரட்சிக்கு புதிய எல்லைகளை வகுத்து தருவதாகவும், எனவே ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனி அரசாக பிரிவதும், தொழிலாளர் வர்க்க கட்சி, இன அடிப்படையில் தனித்தனியாக கட்டப்படுவதும், இச்சகாப்பத்தத்தில் செய்யப்பட வேண்டியவை என்றும் அது கூறுகிறது. இக்கருத்துக்கள் மார்க்சிய - லெனினியத்திற்கும் முற்றிலும் புறம்பானவை. பாட்டாளி வர்க்க நலனுக்கு விரோதமானவை இது எவ்வாறு என்று பரிசீலிக்கும் முன்பாக தேசிய இனப் பிரச்சனை பற்றியும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப் பிரச்சனை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது பற்றியும் பொதுவான மார்க்சிய - லெனினிய கண்ணோட்டம் என்ன என்பதைப் பார்ப்போம். முதலில் தேசம், தேசிய இனப் பிரச்சனை என்றால் என்ன. சுயநிர்ணய உரிமை கோரிக்கை ஏன் எழுகிறது, அதன் பொருளென்ன என்பவற்றைப் பார்ப்பது அவசியம் அடுத்து தேசிய இனப்பிரச்சனையில் லெனினிய அணுகுமுறை என்ன என்பதையும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் இப்பிரச்சனை என்ன வடிவம் எடுக்கிறது, அது எவ்வாறு தீர்க்கப்படுகிறது,இப்பிரச்சனையில் பாட்டாளி வர்க்கம் என்ன நிலை மேற்கொள்ளவேண்டும், பாட்டாளி வர்க்க கட்சி எவ்வாறு கட்டப்பட்ட வேண்டும் என்பனவற்றையும் மார்க்சிய - லெனினிய மாவோ சிந்தனை வெளிச்சத்தில் பார்ப்போம். இறுதியாக திருச்சி முற்போக்கு இளைஞர் அணி பெயரால் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் காணப்படும் தவறான கருத்துக்களை விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

தேசம், தேசிய இனப்பிரச்சனை என்றால் என்ன? தேசம், தேசிய இனம் என்றால் என்ன?